குவிந்து கிடக்கும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காண முடியாமல் திணறும் திருச்சி மாவட்ட நிர்வாகம்
மன உளைச்சலில் மனுதாரர்கள்….
அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள சிறப்பு அதிகாரியை கொண்டு விரிவான விசாரணை செய்ய கோரிக்கை எழந்துள்ளது
திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள வட்ட அலுவலகங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் உட்பட அனைத்து மனுக்களும் குறைந்த அளவிலான நேர காலத்திற்குள் உரிய தீர்வை உடனே வழங்க வேண்டுமென அவ்வப்போது ஆய்வு கூட்டங்களை நடத்தியும் மற்றும் நாள்தோறும் புள்ளி விவரங்களை கேட்டு விரட்டி விரட்டி வேலை வாங்கும் மாவட்ட நிர்வாகமானது,
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேல்முறையீட்டு மனுவிற்கு உரிய உத்தரவு பிறப்பிக்காமல் கிடப்பில் இருப்பதாகவும், மனு தொடர்பாக விசாரிக்க வரும் மனுதாரர்களை *இன்று போய்.!! நாளை வா..!!!* என தினமும் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டி உள்ளனர்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலரால் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பட்டா தொடர்பான மேல்முறையீட்டு மனுவிற்கும் மற்றும் வாரிசு சான்று தொடர்பான மேல்முறையீட்டு மனுவிற்கும் உரிய விசாரணை முடிந்தும், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டும், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரை அறிக்கை இருந்தும் கடந்த பத்து மாதங்களாக பல கோப்புகளுக்கு உரிய உத்தரவு வழங்கப்படாமல் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதே போன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் இருந்தும் அறிக்கை கேட்டு வரும் குறிப்பானை கடிதங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பதில் கடிதம் அனுப்பப்படாமல் பல ஆண்டுகளாக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் கிடப்பில் இருப்பதாக கூறுகின்றனர். இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் திடீர் ஆய்வுக்கு சென்று தன் பதிவேட்டின் விவரத்தினை ஆய்வு செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு உரிய தீர்வு வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம்..