நில அளவை கோட்ட ஆய்வாளர்கள் அவர்களுக்கான கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்ய மறுக்கப்படுகிறதா?
தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எக்காரணத்தைக் கொண்டும் அரசு ஊழியர் அல்லாத தனி நபர்களை கண்டிப்பாக பணியில் ஈடுபடுத்த கூடாது.
மேலும் ஒவ்வொரு வருவாய்த்துறை அலுவலகங்களில் தனி நபர்கள் யாரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமென ஆணை வழங்கப்பட்டும் திருச்சியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களில் மண்டல துணை அலுவலர்களும் மற்றும் நில அளவை பிரிவு அலுவலர்களும் தமிழக அரசின் ஆணையை துளியும் மதிக்காமலும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமலும் தனி நபர்கள் சிலரை வைத்துக் கொண்டு அரசு அலுவலக தொடர்பான பணிகளை செய்து கொண்டு அதற்காக ஆயிரம் கணக்கில் வசூல் வேட்டை செய்து வருவதை மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருவதற்கு காரணம் என்ன…? என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.!!!
அதே போல் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு கோட்டங்களுக்கான நில அளவை கோட்ட ஆய்வாளர்கள் அந்தந்த கோட்டங்களில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 19-6-2023 முதல் பணி செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தும் இதுவரை ஒரு கோட்ட ஆய்வாளர்கள் கூட அவர்களுக்குரிய கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லாமல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை உதவி இயக்குனர் அலுவலகத்திலே பணி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.