திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை!!!!
திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் உள்ள நிலங்கள் அனைத்தும் வருவாய்துறை ஆவணங்களில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி தற்கால நம்பகர்கள் என்ற பெயரில் பதிவாகி உள்ளதாகவும் மற்றும் “கஞ்சமலை முதலியார் குடும்ப டிரஸ்டுக்கு” சொந்தமான சொத்து என பத்திரப் பதிவு ஆவணங்கள் பதிவாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் பறவைகள் சாலையில் அமைந்துள்ள நகரளவை வார்டு: AB, பிளாக்: 20, நகரளவை புல எண்: 1 முதல் 120 முடிய உள்ள சர்வே எண்களில் உள்ள நிலங்களுக்கு கஞ்சமலை முதலியார் டிரஸ்டு என்ற பெயருக்கும் தாயுமானசுவாமி தற்கால
நம்பகர்கள் என்ற பெயருக்கும் தொடர்பு ஆவணங்கள் எதுவும் இதுவரை தாக்கல் செய்யாத காரணத்தினால் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு எந்தவித பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்து வந்த சூழ்நிலையில் திருச்சி மாநகராட்சி டவுன் சர்வேயர் திருமதி. பரிமளா மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் திரு பிரேம்குமார் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்தில் பட்டா மாறுதல் செய்ய பல லட்சங்களை வாங்கிக் கொண்டதாகவும் அதற்காக சட்டத்திற்கு புறம்பாக முறைகேடான வழியில் பட்டா பெயர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது! !!!
இவ்விவகாரத்தில் டவுன் சர்வேயர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் அவர்களுக்கு புகார்கள் தொடர்ந்து சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட புகார் தொடர்பாக வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் மற்றும் விரிவான விசாரணை செய்தும் அறிக்கை வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.