டிசம்பர் 2019 இல், இந்திய நாடாளுமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவை (CAB) நிறைவேற்றியதும், நாட்டில் ஒரு தொடர் போராட்டம் தொடங்கியது. அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. டெல்லியில் CAAவுக்கு எதிரான போராட்டத்தை நாடு மட்டும் அல்ல, உலகமே கூர்ந்து கவனித்தது.
CAAவுக்கு எதிராக அஸ்ஸாமில் உணர்வுப்பூர்வமான எதிர்ப்பு தொடங்கினாலும், நாடு முழுவதும் எதிர்ப்பாளிகள் கிளம்பியபோது மத உணர்வாக மாறியது. அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமையை இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கியிருந்தாலும் போராட்டத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவதும், நாட்டை இழிவுபடுத்துவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், CAAவுக்கு எதிராக போராடிய முஸ்லிம்கள் உள்பட பெரும்பாலானோர் இந்த சட்டத்தைப் பற்றிய முழுமையான புரிந்தால் இருந்ததை என்று தெரியவில்லை.
தங்களின் இந்தியக் குடியுரிமை பறிக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்திய முஸ்லீம்கள் CAAவை எதிர்த்திருந்தால், அவர்களின் எதிர்ப்பு பயனற்றது. அவர்கள் இந்தியாவை இழிவுப்படுத்தும் நோக்கில் செயல்படுவோரின் சதிகளால் பாதிக்கப்பட்டனர். CAA என்பது இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், அதை அகற்றுவதற்கானது அல்ல. CAA மூலம், 2014 டிசம்பருக்கு முன் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. CAA நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது.
இந்திய முஸ்லீம்கள் யாரிடமும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொள்ளாமல், தாங்களாகவே CAA பற்றி ஆய்வு செய்து, இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நியாயமானதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.