திருச்சி, மார்ச் 27 :
திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார். கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி கலை
மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஆர். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 673 பேருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.அவர்தம் உரையில், கல்வியே ஒருவனை சிறந்த குடிமகனாக ஆக்குகிறது. ஆய்வுத்துறைகளில் பட்டம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், சர்.சி.வி. ராமன் போன்றவர்களின் சாதனைகளை முன்மாதிரிகளாகக் கொண்டு மாணவ, மாணவியர் தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அதுவே உங்கள் குடும்பத்திற்கும், கல்லூரிக்கும், நாட்டிற்கும் பயனுடையதாக இருக்கும் என்றார்.