இந்தச் சட்ட திருத்தம், குடியுரிமைச் சட்டம் 1955 இல் பிரிவு (2), துணைபிரிவு (1), உட்பிரிவு b இல் விதிகளை சேர்க்கிறது. இதன்படி “ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், பௌத்தர், சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும் , டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்து மற்றும் மத்திய அரசால், பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம், 1920 இன் பிரிவு 3, துணைபிரிவு (2), உட்பிரிவு (c) இன் கீழ் அல்லது வெளிநாட்டினர் சட்டம் 1946 இன் விதிகள் அல்லது ஏதேனும் ஒரு ஆணையின்படி விலக்கு அளிக்கப்பட்டவர், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
மேலும், குடியுரிமைச் சட்டம் 1955 இல் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு 6B, குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அமலுக்கு வந்த நாளிலிருந்து, இந்தப் பிரிவின் கீழ் சட்டவிரோத புலம்பெயர்வு அல்லது குடியுரிமை தொடர்பாக ஒரு நபருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட பிறகு நிறுத்தப்படும். இத்தகாய வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் கட்டி, எந்தவொரு நபரும் இந்தப் பிரிவின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது, மேலும் மத்திய அரசு அல்லது அதன் சார்பில் நியமிக்கப்பட்ட எந்தவரு அமைப்பும் இவ்வகை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கூறிய காரணங்களுக்காக நிராகரிக்காது.
மேலும், “இந்தப் பிரிவின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர், அத்தகைய விண்ணப்பம் செய்ததன் அடிப்படையில், விண்ணப்பத்தைப் பெற்ற தேதியில் அவருக்குக் கிடைக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகளை நிராகரிக்க கூடாது” என்று விதியையும் சேர்க்கிறது.
மேலும் பிரிவு 6B(4)ன் படி அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் அல்லது திரிபுராவின் பழங்குடிப் பகுதிகளுக்கும், வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறை, 1873 கீழ் அறிவிக்கப்பட்டுள்ள “தி இன்னர் லைன்” கீழ் உள்ள பகுதிக்கும் இந்தப் பிரிவில் உள்ள எதுவும் பொருந்தாது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-ன் நோக்கம், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய தேசமான பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டதால் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு ஒரு தீர்வை வழங்குவதாகும் . மேலும், இந்த சட்டம் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் வந்த மத சிறுபான்மையினருக்கு பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம் 1920 இன் கீழ் விலக்கு அளிப்பதையும், வெளிநாட்டினர் சட்டம், 1946 இன் விதிகளிள் இருந்து விலக்கு அளிப்பதையும் மேலும் குடியுரிமைச் சட்டம், 1955 இல் அவர்களை சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் சிறுபான்மையினர் அல்ல என்பதால் இந்தச் சட்டம் முஸ்லிம்களை உள்ளடக்கவில்லை. இந்த மூன்று முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவிற்கு வந்த முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமையை இந்த சட்டம் அங்கீகரிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு மற்றும் குடியுரிமை
இப்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள குடியுரிமை தொடர்பான சட்டங்கள் பற்றி பார்ப்போம். இந்திய அரசியலமைப்பின் பகுதி இரண்டு மற்றும் சரத்து 5 முதல் 11 வரை குடியுரிமை பற்றி கூறுகிறது. சரத்து 5 அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்போது இந்தியவில் வசித்து வந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்குகிறது. 1948 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதிக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த சில நபர்களின் குடியுரிமைக்கான உரிமையை சரத்து 6 வழங்குகிறது .
இந்திய பிரிவினைகக்கு பிறகு பாகிஸ்தானில் தங்க முடிவெடுத்து, இஸ்லாமிய நாடான பாகிஸ்தானால் மதரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளான சிறுபான்மையினரின் நிலையை பற்றி சிந்திப்பது அவசியம். பாகிஸ்தானில் அவர்களின் சூழ்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் பிரிக்கப்படாத இந்தியாவின் குடிமக்கள் என்பதாலும், இந்திய அவர்களின் கடைசி நம்பிக்கையாக இருந்ததாலும் அவர்கள் இந்தியாவில் குடியேறத் தொடங்கினர். எனவே , 1950ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மற்றும் 1971ல் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களின் குடியுரிமை என்ன?
குடியுரிமையை ஒழுங்குபடுத்த பாராளுமன்றம் சட்டமியற்ற முடியும் என்று சரத்து-11 கூறுகிறது, ஆனால் இந்திய அரசாங்கம் குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, இறுதியாக குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை என்பது அரசியல்அமைப்பு சட்டதின் பகுதி –IIIஐ சேர்ந்ததல்ல மாறாக பகுதி II ஐ சார்ந்தது. எனவே பாராளுமன்றம் குடியுரிமைக்கான சட்டங்களை இயற்ற முடியும்.
சரத்து-246 மட்டுமல்ல, 7 வது அட்டவணையின் கீழ் உள்ள மத்திய பட்டியல், 17வது பதிவு, குடியுரிமை தொடர்பான சட்டத்தை உருவாக்கும் அதிகாரத்திற்கான பிரத்யேக உரிமைகளை மத்திய அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
சரத்து-14 சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டங்களின் சம பாதுகாப்பு பற்றி கூறுகிறது. மேலும் சரத்து-14ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் இந்தச் சட்டத்தால் மீறப்படவில்லை. சிறுபான்மையினரை மதரீதியான துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பதே CAAஇன் நோக்கமாகும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது தனிப்பட்ட ஒன்று, அது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைச் சொல்ல முடியாது, ஏனெனில் இது எதிர்காலத்திற்கான சவால். தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு அரசின் கொள்கை, சட்டம் அல்ல. மேலும் CAA க்கும் NRC க்கும் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் இரண்டு சட்டங்களின் நோக்கமும் வேறுபட்டது. NRC இன் அசாம் மாதிரி இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படாது, ஏனெனில் அசாம் ஒப்பந்தம், 1985 மதிய அரசு மீது சில பிணைப்புக் கடமைகளை வகுத்துள்ளது. இது அகில இந்திய NRCக்கு முன்னுதாரணமாக இருக்காது. எனவே, முஸ்லீம்கள் NRC பற்றி கவலைப்படத் தேவையில்லை. எனவே CAA மற்றும் NRC பற்றிய உம்மையை அறிந்து, இச்சட்டங்களுக்கு எதிரான போலி பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் இருப்பதே தறப்போதய காலத்தின் கட்டாயம்.