Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 பற்றிய ஒரு சரியான பார்வை

0

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மற்ற மதங்களைச் சேர்ந்த இந்தியக் குடிமக்களைப் போலவே, இந்திய முஸ்லிம்களும் தாங்கள் அனுபவித்து வரும் சுதந்திரம் மற்றும் உரிமைகளை குறைக்காமல், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானில் மத ரீதியில் துன்புறுத்தப்ட்டு டிசம்பர் 31, 2014 அன்றோ அல்லது அதற்கு முன்போ இந்தியாவிற்குள் நுழைந்தவர்களுக்கு அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கான இழப்பீடாக, குடியுரிமை விண்ணப்பத்தின் தகுதி காலத்தை 11 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 குறைத்துள்ளது.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இச்சட்டத்தின் தாக்கங்கள் என்ன?
இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும், புலம்பெயர்ந்திராத இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அவர்களின் குடியுரிமையை பாதிக்கும் வகையில் உருவாக்கப்படவில்லை. மேலும், இது தற்போது இந்தியாவில் உள்ள 18 கோடி முஸ்லிம்களுடனும் தொடர்புடையதல்ல. முஸ்லிம்களுக்கு அவர்களின் இந்து சமய சகோதரர்களைப் போலவே சம உரிமைகள் உள்ளன. இந்த சட்டத்திற்குப் பிறகு, எந்தவொரு இந்திய குடிமகனும் தனது குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை
சட்ட விரோதமாக புலம்பெயர்ந்த முஸ்லிம்களை பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு திரும்ப அனுப்புவதற்கான ஒப்பந்தம் ஏதேனும் உள்ளதா?
சட்ட விரோதமாக புலம்பெயர்ந்த முஸ்லிம்களை திரும்ப அனுப்புவதற்கான எந்தவித ஒப்பந்தமும் மேற்கூறிய நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளவில்லை. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தச் சட்டம் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற கவலை நியாயமற்றது.
சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் யார்?
1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தைப் போலவே, இந்த குடியுரிமை திருத்தச் சட்டமும் (CAA) “செல்லத்தக்க ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த வெளிநாட்டவர்களே சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள்” என வரையறுக்கிறது.

இஸ்லாம் மதத்தின் மீது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) தாக்கம் என்ன?
மூன்று இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதால், உலகம் முழுவதும் இஸ்லாத்தின் பெயர் மோசமாகக் களங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாம், ஒரு அமைதியான மதமாக இருப்பதால், மத அடிப்படையில் வெறுப்பு, வன்முறை மற்றும் எந்தவொரு துன்புறுத்தலையும் ஒருபோதும் போதிப்பதில்லை. துன்புறுத்தலுக்கான இரக்கத்தையும் காட்டும் இந்த சட்டம், ஒடுக்குமுறை என்ற பெயரில் இஸ்லாத்தை களங்கப்படுத்தாமல் பாதுகாக்கிறது.

 

இந்திய குடியுரிமை பெற முஸ்லீம்களுக்கு ஏதேனும் தடை உள்ளதா?
இல்லை. குடியுரிமைச் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெற உலகின் எந்தபகுதியிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு எந்தத் தடையும் இல்லை.
திருத்தத்தின் அவசியம் என்ன?
மூன்று நாடுகளின் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் மீது கருணை காட்ட, இந்தச் சட்டம் அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இந்தியக் குடியுரிமையைப் பெற இந்தியாவின் பசுமையான தாராள கலாச்சாரத்தின் படி அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. குடியுரிமை முறையை முறைபடுத்தவும், சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்தவும், இந்தச் சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது.
அரசாங்கத்தின் முந்தைய முயற்சிகள் என்ன?
2016ல் மத்திய அரசு அந்த மூன்று நாடுகளின் சிறுபான்மையினரை இந்தியாவில் தங்குவதற்கு நீண்ட கால விசாவிற்கு தகுதியுடையவர்களாக்கியது.
எந்தவொரு வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடு உள்ளதா?
குடியுரிமை சட்டங்களை CAA ரத்து செய்யாது. எனவே, எந்தவொரு வெளிநாட்டிலிருந்தும் குடியேறிய முஸ்லீம்கள் இந்தியக் குடிமகனாக இருக்க விரும்பும் பட்சத்தில், தற்போதுள்ள குடியுரிமை சட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய மூன்று இஸ்லாமிய நாடுகளில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளன முஸ்லிம்களை, தற்போதுள்ள குடியுரிமை சட்டங்களின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதைத் CAA தடுக்கவில்லை.
எனவே, பிரிவினை சக்திகளால் பரப்பப்படும் வதந்திளை பொருட்படுத்தமாலும், எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்