Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

குடியுரிமை (திருத்தம்) சட்டம் – 2019 மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான பாதையைப் புரிந்துகொள்வது

0

குடியுரிமை (திருத்தம்) சட்டம் – 2019 (CAA) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் டிசம்பர் 12, 2019 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. சமகால உலகளாவிய மக்கள் தொகை சூழலுக்கேற்பவும் பழைய குடியுரிமைச்சட்டம் 1955 ஐ இந்தியாவின் நலனுக்கேற்ப மாற்றவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
மதத்தின் பெயரால் பூர்விக நிலத்தில் பாகுபாட்டுக்குள்ளான ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கு இச்சட்டம் இந்திய குடியுரிமை வழங்கும். இந்து மதம்-கிறிஸ்தவம்- பௌத்தம்- சமணம்- சீக்கியம் – பார்சி போன்ற மதத்தினர் தங்கள் தாயகத்தில் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறான துன்புறுத்தலுக்குள்ளான மக்கள் இந்தியாவிற்கு தஞ்சம் புகுவதை தவிர வேறுவழில்லை. அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீட்டின்படி, அஸ்ஸாம் – மேகாலயா – திரிபுரா – மேற்கு வங்காளம் – பீகார் – ஒடிசா – தெலுங்கானா – கர்நாடகா – ராஜஸ்தான் – பஞ்சாப் – ஜம்மு & காஷ்மீர் போன்ற இந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய அகதிகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளனர். குடியிருப்பின் அடிப்படையில் அவர்களுக்கு இந்திய குடியுரிமையை CAA உத்தரவாதம் செய்கிறது. CAA-2019 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே நிபந்தனை அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த தேதி பற்றியது மட்டுமே. அவர்களது சொந்த நாட்டில் (பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்-பங்களாதேஷ்) துன்புறுத்தப்பட்ட இந்த மதச் சிறுபான்மையினர் டிசம்பர் 31.2014 அல்லது அதற்கு முன் இந்தியாவில் நுழைந்திருக்க வேண்டும்.
இச்சட்டம் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கும் ஒரு கருவி என சில பிரிவினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். உண்மையில், இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, மாறாக ரத்து செய்வதற்ககானதல்ல. இச்சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் முஸ்லிம்கள் உட்பட இந்திய குடிமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். மேலே குறிப்பிடப்பட்ட மூன்று நாடுகளில் நீண்டகால மத துன்புறுத்தலுக்குள்ளாகி, இந்தியாவிடம் தஞ்சம் கோரும் மக்களுக்கு சம வாய்ப்புகள் நலனை CAA உறுதி செய்யும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து பல கவலைகள் தெரிவிக்கின்றனர். எனவே, இச்சட்டத்தை இரண்டு நாடாளுமன்றக் குழுக்களுக்கு (லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிற்கும் துணைச் சட்டத்தின் கமிட்டிகள்) பரிந்துரைக்கப்பட்டது. இந்த கமிட்டிகள் இந்திய அரசாங்கத்தை (உள்துறை அமைச்சகம்) விதிகளை உருவாக்க பரிந்துரைத்தது, இது CAA ஐ செயல்படுத்துவது பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதிசெய்ய பணிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்