குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அடுத்த ஏழு நாட்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் கூறியதை அடுத்து, இப்போது மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. இந்த சட்டம் டிசம்பர் 2019 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. CAA என்பது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து துன்புறுத்தி வெளியேற்ற்றப்பட்ட மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாகும். உலகின் ஒரே இந்து நாட்டில் அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது CAA, உலக அளவில் இருக்கும் இந்துக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவிற்கு உண்டு.
கடந்த காலங்களில், CAA வை தேசிய குடியுரிமை பதிவேட்டுடன் (NRC) இணைத்து ஒரு சர்ச்சை கிளம்பியது. NRC என்பது அனைத்து இந்திய குடிமக்களின் விவரங்களை கண்டறிந்து சரிபார்த்து அவர்களின் சட்டபூர்வமான நிலையைக் கண்டறியவும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களை விலக்கவும் அல்லது நாடு கடத்த்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. இது அடிப்படையில் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கான ஆவணச் சான்றுகளைத் தேடும் செயல்முறையாகும். CAA என்பது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை, ஏனெனில் இது எந்தவொரு குழுவின், குடியுரிமையையும் முக்கியமாக முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்காது. முஸ்லிம்கள் CAA சட்டத்தின் கீழ் வரவில்லையென்பதால் CAA வை செயல்படுத்துவது எந்த வகையிலும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உணர வேண்டும். ஏனெனில், முஸ்லீம்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டால், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள முஸ்லிம்கள் இந்தியக் குடியுரிமையை கோரும் வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பின்மை, பொருளாதார தேக்கநிலை மற்றும் நிலையில்லா அரசியல் காரணமாக பல பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் குடிமக்களாக மாற விரும்பும் போக்கு பாகிஸ்தானில் வளர்ந்து வருகிறது. CAA மூலம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் போன்ற பிற சிறுபான்மையினருக்கு புகலிடம் வழங்கக்கூடிய நாடாக இந்தியா மட்டுமே இருக்கிறது, ஏனெனில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தாங்கள் செல்ல நிறைய முஸ்லீம் நாடுகள் தங்களை அவர்கள் நாட்டின் குடிமக்களாக ஏற்றுகொள்ள தயாராக இருக்கிறது.
இந்திய நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இந்த சட்டத்தில் தங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால்,அவர்கள் தாராளமாக சட்டப்பூர்வ வழியை நாடலாம் என்பதற்கு உதாரணம், முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கல். இதை விடுத்து அவர்கள் போராட்ட கலாச்சாரத்தை நோக்கி செல்வது மிகவும் தவறான செயல். இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதி பெரிதாக்குவது இரு மதங்களையும் பிளவுபடுத்தும் நோக்கில் உள்ளது. மேலும், இது ஒரு வகுப்புவாத விஷயமாகப் பயன்படுத்துவதன் மூலம், முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான சமூக இடைவெளியை விரிவுபடுத்துகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் போது, எந்த புதிய சட்டமும் அவர்களின் அடிப்படை உரிமைகளை ஆக்கிரமிக்க முடியாது. எனவே, முஸ்லிம்கள் தெருப் போராட்டங்கள் மூலம் மோதலில் ஈடுபடாமல் இருப்பது இன்றியமையாதது, இல்லையென்றால் அவர்களை நாடு மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுத்திவிடும். இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களிடம் நிலவும் தேவையற்ற அச்சத்தை நீக்கி அவர்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்ற நம்பிக்கையை கொடுப்பதன் மூலமே நாட்டில் மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்.