Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள நாட்டுப்பற்று: குடியுரிமை சட்டதிருத்த மசோதாவின் புரிதல் மற்றும் மக்கள் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவித்தல்

0

குடியுரிமை சட்டதிருத்த மசோதா 2019 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அன்றுமுதல் இந்த சட்டம் பேசும்பொருளாக மாறிவிட்டது , குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இதனை தங்கள் மக்களுக்கு பாதகமான சட்டம் என எண்ணுகின்றனர் . இதனுடம் சம்பந்தபட்ட எதிர்ப்பு சம்பவங்களை (சம்பந்தப்பட்ட வன்முறைகள்) யாராலும் மறக்க இயலாது. அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட போதனைகள் மற்றும் முகமது நபியினால் கூறிய எடுத்துக்காட்டுதளின் படி இஸ்லாத்தில் ஒரு நாட்டின் மீது மற்றும் அதன் சட்டதிட்டங்கள் மீது விசுவாசம் கொள்வதன் முக்கியத்துவத்தை இஸ்லாத்தின் அடிப்படையில் ஆராய்வது அவசியமானதாகும் .
இறைநம்பிக்கை மற்றும் நாட்டின் மீது வைக்கும் விசுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாத்தில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்படிதல் பற்றி குரானில் ஸுரா அன் நிசா (4:60 ) கூறுகையில் “இறைநம்பிக்கை உள்ளவர்களே , கடவுளை அஞ்சிக் கொள்ளுங்கள் , நபிகள் நாயகத்திற்க்கு கீழ்ப்படியுங்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்படிந்து செயல்படுங்கள்”. குரானில் கூறிய இந்த கூற்று நாட்டின் சட்டதிங்கள் மற்றும் நாட்டை ஆழ்பவர்களுக்கு மரியாதை கொடுத்து நடப்பதை இந்திய முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகின்றது. தாய்நாட்டின் மீது உள்ள அன்பு மற்றும் உண்மையான தேசபக்தியே நம்பிக்கையின் அடிப்படை அம்சம் என நபிகள் நாயகம் வழியுறுத்தியுள்ளார் . “தாய்நாட்டின் மீது கொண்ட அன்பு நம்பிக்கையின் ஒரு அங்கமாகும்” என்று நபிகள் நாயகம் கூறுகிறார். இஸ்லாமியர்களின் இறைவன் மீது கொண்ட அன்பு மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட அர்ப்பணிப்பு இவை அனைத்தும் முரண்பட்ட கருத்துகள் அல்ல மாறாக அது இரண்டுமே நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அமைதியை ஊக்குவிக் கவும் மக்களின் நலனுக்க பாடுபடவும் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழியுறுத்துகிறது . இறைவன் மீது கொண்ட உண்மையான அன்பு மற்றும் இஸ்லாம் இரண்டுமே தாய்நாட்டின் மீது கொண்ட விசுவாசம், மரியாதை மற்றும் நாட்டின் மீது கொண்ட பக்தி இவற்றை நம்முள் ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் பொறுப்புள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும், அவர்களின் செயல்களில் நீதி மற்றும் நியாயமான கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். சட்டத்தை தன் கையில் எடுத்தல் அல்லது நாட்டிற்க்கு எதிராக சூழ்ச்சி செய்தல் இவை அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும் . இஸ்லாம் அமைதி, நீதி மற்றும் சட்டத்தின்படி ஆட்சி ஆகியவற்றை வழியுறுத்துகிறது. ஏதேனும் குறைகள் அல்லது கவலைகள் இருப்பின் அனைத்தும் நாட்டின் சட்ட வரையறைக்குள் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். ஒரு தனிமனிதன் சட்டபடி செய்யபடும் மனிதனாக , நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவனாக மற்றும் தன்னால் முடிந்த பங்களிப்பை தன் சமூகத்திற்க்கு வழங்குபவனக இருக்க வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் வழியுறுத்துகிறது . இந்த புரிதலின் அடிப்படையில் , இந்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்பதை இந்திய முஸ்லிம்கள் அறிந்துகொள்ளவேண்டும். இந்த சட்டமானது மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி அந்நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும். இஸ்லாத்தின் போதனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்திய முஸ்லிம்கள் தங்கள் தேசத்திற்கு விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒரு இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை வளர்ப்பதில் தீவிரமாக பங்கேற்கலாம்.
CAA என்பது இந்திய முஸ்லிம்களை குறிவைத்து ஏற்றப்பட்ட சட்டம் இல்லை, அது மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளான மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட வடிவமாகும். CAA பற்றிய தவறான கருத்துக்களை அகற்றி, குரானின் மொழிகளுக்கு ஏற்ப்ப இந்திய இஸ்லாமியர்கள் விசுவாசத்தின் ஆழமான உணர்வை வளர்த்து, இஸ்லாம் பரிந்துரைக்கும் நீதி, அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்தி, தங்கள் நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கு தீவிரமாக பங்களிக்க வேண்டும். பேச்சுவார்த்தை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்திய இஸ்லாமியர்கள் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றவேண்டும் .

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்