அண்டை தேசமான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி அந்நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட சட்டம் தான் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவாகும். இந்த சட்ட திருத்த மசோதாவைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது . சிலர் இந்த சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனவும் இது இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பிற்க்கு எதிரானது எனவும் வாதிடுகின்றனர் . ஆனால் இந்த சட்ட திருத்த மசோதாவிற்க்கு சாதகமாக உள்ளவர்களோ மத நம்பிக்கை காரணமாக துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவது அவசியம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர் . CAA என்பது ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கத்தால் மனிதாபிமான அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தமாகும்.
CAA-வின் தாக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் இந்திய முஸ்லிம்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள பாதுகாப்பு விதிகளை பற்றி அறிவது அவசியமாகிறது. மத சுதந்திரத்தை பாதுகாப்பது மற்றும் மதத்தின் பெயரால் செய்யப்படும் பாகுபாடுகளை தடைசெய்வது போன்றவற்றை நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது . இந்திய முஸ்லிம்கள் அவ்வப்போது தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை எவரும் மறுக்க முடியாது ஆனால் நம் நாட்டின் சட்டம் எப்பொழுதும் அதன் கடமையை சரிவர செய்துள்ளது (சில வழக்குகளை தவிர) மற்றும் தாக்குதல்கள் சம்பந்தமான அனைத்து வழக்குகளுக்கும் எந்த பாகுபடுமின்றி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம் மற்றும் சமூக கட்டமைப்பை செதுக்குவதில் மதம் பெரும்பங்காற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் . ஒருவர் தனது மதத்தை பின்பற்றுவதற்க்கான உரிமையை பாதுகாப்பது எந்த அளவிற்க்கு முக்கியமோ அந்த அளவிற்க்கு மதங்களுக்கு இடையேயான புரிதலையும் மரியாதையையும் வளர்ப்பது முக்கியமானதாகும். CAA பற்றிய உண்மையான புரிதலை மக்களிடையே அதிகரிப்பதன்மூலம் தவறான புரிதல்களை தவிர்க்க முடியும் மற்றும் பிற மதங்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த முடியும். இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களின் நாட்டினுள் உள்ள பன்முகத்தன்மையை அடையாளம் காணவேண்டும், இதில் வெவ்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரம் உள்ளடக்கிய இந்தியாவும் அடங்கும். அவர்கள் CAA-வை பாரபட்சம் காட்டும் ஒரு சட்டமாக பார்த்தல் சரி அல்ல , அது நமது நாட்டை பிரிக்க விரும்பும் சக்திகளின் கைகளில் போகக்கூடும் . இந்திய இஸ்லாமியர்கள் வெளிநாட்டினர் அல்ல அகத்தியும் அல்ல. இந்தியக் குடிமக்களாக உள்ள இந்திய முஸ்லிம்கள் அனைத்து சலுகைகளும் அனுபவிக்கும் உயர்ந்த இடத்தில் உள்ளனர், அவர்களை யாராலும் வலுக்கட்டாயமாக நம் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது . இதனை இந்திய அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளது. இந்த குடியுரிமை சட்டமானது இந்திய முஸ்லிம்கள் மற்றும் எவரின் குடியுரிமை பற்றி கேள்வி கேட்கவோ அச்சுறுத்தவோ மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடியுரிமை சட்டமானது தனிப்பட்ட நபருக்கு குடியுரிமை வளங்கவே தவிர யாரின் குடியுரிமையையும் ரத்து செய்வதற்க்கு அல்ல .
இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் அனைவரும் நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் சம பங்குதரர்களாக உள்ளனர், இதன்மூலம் வெவ்வேறு கலாச்சாரம், மதங்கள் அங்கீகரிக்கப்படுகிறது மற்றும் மற்ற சமூகத்தினர்களிடையே சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது. குடியுரிமை சட்டதிருத்த மசோதா நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் எந்தவித பாகுபாடுமின்றி அமல்படுத்தப்பட வேண்டும். CAA பற்றிய தெளிவான புரிதல் மக்களுக்கு இருக்க வேண்டும் மற்றும் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் CAA பாதிப்பு பற்றிய தவறான அல்லது அச்சுறுத்தும் வகையாக தகவல் பரப்பாமல் இருக்கவேண்டும்.