அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு விரைவாக குடியுரிமை வழங்குவதன் மூலம், புலம்பெயர்ந்த சமூகங்கள் நம் நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை CAA தீர்த்துவிடும். இது அனைத்து குடிமக்களுக்களின் மத சார்புகளைப் பொருட்படுத்தாமல் அவர்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
மேலும், துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு CAA வின் மூலம் இந்தியாவில் அடைக்கலம் அளிப்பதால், இந்திய முஸ்லிம்கள் தற்போது அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. மாறாக, இது இந்தியாவின் மனிதாபிமானமிக்க கொள்கையையும், மதச்சார்பின்மையையும் நிலைநாட்டும் வகையில் விளிம்பு நிலையில் உள்ள சமூகங்களுக்கு அவர்களின் மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மதக் குழுக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும் ஆற்றலை இந்தச் சட்டம் கொண்டுள்ளது. அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் போராட்டங்களை அங்கீகரித்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதன் மூலம், CAA வகுப்புவாத பிளவுகளைக் குறைத்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்த உதவும் என்ற சக்திவாய்ந்த செய்தியை தெரிவிக்கிறது.
கூடுதலாக, துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் CAA இன் முக்கியத்துவம், பிராந்தியத்தில் மத சுதந்திரம் மற்றும் பன்முகத்துவத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது. மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கும் தனிநபர்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதன் மூலம், இந்தியா அனைத்து மத சமூகங்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைமீண்டும் உறுதிப்படுத்துகிறது. CAA வை பற்றிய சீரான மற்றும் நுணுக்கமான புரிதல் இருந்தால் மட்டுமே இந்தியாவின் மாறுபட்ட நிலப்பரப்பில் பல்வேறு மதங்களின் மீது உள்ள தாக்கம் தெரிய வரும்.