Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

CAA பற்றிய தவறான கருத்துக்களும் அதன் உண்மையான புரிதலும்

0

2019 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கணிசமான சர்ச்சைளுக்கும் வதந்திகளுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் நுணுக்கமான மற்றும் துல்லியமான புரிதலை வளர்க்கும் முயற்சியில், CAAவைச் சுற்றி நிலவும் கட்டுக்கதைகளுக்கும் வதந்திகளுக்கும் தீர்வு காண்பது முக்கியம்.
CAA பாரபட்சமான சட்டம் என்று பொதுவாக நிலவும் கருத்து முற்றிலும் தவறானது. மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரைத்த தெரிவு செய்து குடியுரிமை வழங்குகிறது என்றும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், இந்த நாடுகளில் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிகள் உள்ளிட்ட மத சிறுபான்மையின அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே CAA வின் வெளிப்படையான நோக்கம். இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் உள்பட எந்த மத சமூகத்திற்கும் எதிரான பாகுபாடு அல்ல.
CAA என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) முன்னோடி என்றும் சில சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம்கள், விலக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூட வந்ததிகளைப் பரப்புகின்றனர். CAA மற்றும் NRC ஆகியவை தனித்தனியான செயல்முறைகள். CAA குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டும் துரிதமாக குடியுரிமை பெறும் பாதையை வழங்குகிறது. அதே சமயம், NRC இந்தியாவில் வசிக்கும் குடிமக்களை அடையாளம் கண்டு சரிபார்க்கும் நோக்கம் கொண்டது. CAA இந்திய குடிமக்களின் தற்போதைய உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.
மேலும், NRCயின் குடியுரிமைச் சரிபார்ப்புச் செயல்பாட்டின் போது CAA மூலமாக பாரபட்சம் காட்டப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. CAA சட்டம் NRCயின் முன்னோடி அல்ல. NRC பற்றிய சந்தேகங்கள் பிரத்யேகமாக தீர்க்கப்பட வேண்டும்.
CAA இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்ற கருத்தும் தவறானது. குறிப்பிட்ட மத சமூகங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், CAA நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை மீறுவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், சில மத சிறுபான்மையினர் வரலாற்றிலும் சமகாலத்திலும் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்கு நமது அரசியலமைப்பு நெறிமுறைகளை பின்பற்றி தீர்வு காண முற்படுகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்காக 1985 இல் கையெழுத்திடப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தை CAA குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதும் ஒரு தவறான கருத்து. அசாமில் சட்டவிரோதமாக நுழைந்த நபர்களுக்கு குடியுரிமை வழங்குவதால் CAA அசாம் ஒப்பந்தத்திற்கு முரணானது என்று சிலர் வாதிடுகின்றனர். இருப்பினும், அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான விதிகளை CAA கொண்டுள்ளது.வடகிழக்கு மாநில அரசுகள் CAAவில் இருந்து சில பகுதிகளுக்கு விலக்களிக்கலாம். இதனால், உள்ளூர் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களில் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.
மேலும், மியான்மரில் இருந்து ரோஹிங்கியாக்கள் போன்ற ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகங்களை CAA புறக்கணிக்கிறது என்ற தவறான கருத்தும் உள்ளது. அண்டை நாடுகளில் CAA கவனம் செலுத்துவதால், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் அவலநிலையை இந்திய அரசாங்கம் புறக்கணிக்கிறது என்று அர்த்தமல்ல. இந்த சட்டம் அண்டை நாடுகளில் நிலவும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளை கையாள்கிறது. அனால், பிற மனிதாபிமான முயற்சிகள் அல்லது பரிசீலனைகளைத் தடுக்காது.
முடிவில், புரிந்துணர்வு மிக்க விவாதங்களை எளிதாக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள தவறான கண்ணோட்டங்களை அகற்றுவது அவசியம். இந்திய குடிமக்களின் உரிமைகளை பாதிக்காமலும் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறாமலும், அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதே CAAவின் நோக்கம். இந்தப் விஷயத்தில் புரிந்துணர்வோடு கூடிய ஆக்கபூர்வமான உரையாடல்களை வளர்ப்பதற்கு தவறான கண்ணோட்டங்களைக் களைவது அவசியம்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்