Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

CAA – இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்தில்லை!

0

நமது அண்டை நாடுகளில் மதவெறியை எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் தங்கள் தாய்நாட்டில் பாதுகாப்பாக புகலிடம் பெற இந்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைதான் இந்த CAA.  இது இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்தினரையோ சமூகத்தினரையோ பாதிக்காது. குறிப்பாக, இந்திய முஸ்லீம்கள் CAA பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு ஒரு கண்ணியமான பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதே இந்த சட்டத்தின் நோக்கம்.

மதநம்பிக்கை காரணமாக ஒடுக்குமுறையை சந்திப்பதால் பல காலங்களாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்து மக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்கின்றனர். இந்து மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்பட்ட நபர்களுக்கு குடியுரிமை வழங்கவே CAA  முயல்கிறது. இதன்மூலம், இந்த மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கிறது.  பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை, கட்டாய மதமாற்றங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாரபட்சம் போன்ற ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். சாவின் மூலம் அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்று சுதந்திரமாக வாழ முடியும். இது அவர்களின் மத மற்றும் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்துகிறது, அதே சமயம் விளிம்புநிலைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைக்கு வந்தபோது இருந்த எந்த உரிமையும் பறிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். CAA எந்தவொரு இந்திய குடிமகனின் சட்ட, ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற உரிமைகளையும் மட்டுப்படுத்தவில்லை. வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெறுவதை நிர்வகிக்கும் தற்போதைய சட்ட கட்டமைப்பை CAA  மாற்றியமைக்கவில்லை. உலக புவிசார் அரசியல், அண்டை நாடுகளின் மக்கள்தொகை அமைப்பு, அவர்களின் உள்சமூகக் கட்டமைப்பு மற்றும் வாழும் நிலை, அரசுகளின் செயல்பாடு உட்பட பல காரணிகளைக் கருத்தில் கொள்ளும்போது, நமது அண்டை நாடுகளில் ஒடுக்கப்பட்ட  சமூகங்கள் தஞ்சம் அடையக்கூடிய ஒரே நாடு  இந்தியா மட்டுமே.

CAA ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களுக்கு புகலிடம் கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. முஸ்லிம்கள் உட்பட இந்தியாவின் அனைத்து சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எந்த சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் மீறப்படவில்லை. நமது அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களுகளின் உரிமைகளைக் காக்கும்வரை, வேறு எந்த சட்டமும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்