புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் 110 கோடி மதிப்பிலான அசிஸ் என்ற போதை பொருள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் குழு இறால் பண்ணைக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 110 கோடி மதிப்புள்ள ஹசீஸ் போதை பொருள் சிக்கியது -இந்த போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக தெரிகிறது.சுங்கத்துறை அதிகாரிகள் இறால் பண்ணையில் நடத்திய சோதனையில் 874 கிலோ கஞ்சா மற்றும் 100 கிலோபோதை பொருள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுபறிமுதல் செய்யப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுல்தான் என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை ராமநாதபுரம் போலீஸ் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்