திருச்சியில் பரபரப்பு சம்பவம்.மாடியில் இருந்து தவறி விழுந்து பாஜக நிர்வாகி சாவு.
போலீசார் விசாரணை
திருச்சி கே.கே. நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன் தண்டபாணி (வயது 50 )இவர் திருச்சி மாநகர், மாவட்ட பாஜக பொது செயலாளராக இருந்தார். இவர் தற்போது திருச்சி விமான நிலையத்தை அடுத்த மொரைஸ்சிட்டியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.இதையடுத்து தினமும் அந்த வீட்டுக்கு சென்று அங்கு நடைபெறும் கட்டிட பணி வேலைகளை மேற்பார்வையிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை அந்த புது வீட்டுக்கு சென்று மாடியில் கான்கிரீட் தளத்திற்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி கீழே தரையில்விழுந்தார். இதில், பொன். தண்டபாணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் பொன். தண்டபாணி இறந்து விட்டதாக கூறினார்.இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் பொன்.தண்டபாணி இறந்த செய்தி கேட்டு திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கு அருகே ஏராளமான பாஜகவினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.