பாலக்கரையில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் உட்பட நான்கு பேர் கைது.
திருச்சி மார்ச் 7:
திருச்சி பாலக்கரை மதுரை மெயின் ரோடு மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 25) பெயிண்டர்.இவர் காஜாபேட்டை மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது நான்கு வாலிபர்கள் அவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நான்கு பேரும் கத்தி முனையில் அவரது சட்டை பையில் இருந்த ரூபாய் 1200 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றன.ர் இது குறித்து சதீஷ் ராஜ் உடனடியாக பாலக்கரை போலீசில் புகார் செய்தார். இதை யடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரிடம் பணத்தை பறித்துச் சென்ற பாலக்கரை மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்கிற சந்துரு (வயது 30) அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்கிற மூக்கையன் (வயது 30) காஜா பேட்டை கீழ கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற கட்டையா (வயது 30) திருச்சி சங்கிலியாண்டபுரம் தெரசம்மாள் தெரு பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்கிற கிறிஸ்துவராஜ் (வயது 25)ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் கைதான சந்துரு, ஜஸ்டின் என்கிற கிறிஸ்துவராஜ் ஆகிய இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.