திருச்சியில் கஞ்சா,போதை பொருள் விற்ற இரண்டு பேர் கைது.
ஒருவருக்கு வலைவீச்சு
திருச்சிமார்ச் 6: திருச்சி விமான நிலைய பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைபடுத்து சப் இன்ஸ்பெக்டர் விசாலாட்சி தலைமையிலான போலீசார் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு மூன்று பேர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் மடக்கி பிடித்து கைது செய்ய முயற்சி செய்த போது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அலி ஒஸ்சமா (வயது 23) திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த நசுருதீன் (வயது 19) என்பது தெரிய வந்தது.இதை தொடர்ந்து மேற்கண்ட இரண்டு பேரையும் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய ஹக்கில் என்பவரை தேடி வருகின்றனர்