திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 24.96 லட்சம் மதிப்புள்ள
தங்கம் பிடிபட்டது,பயணியிடம் விசாரணை.
திருச்சி மார்ச் 5: சார்ஜாவிலிருந்து நேற்று திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஆண் பயணி ஒருவரின் ஜீன்ஸ் பேண்டை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த பொழுது அதில் 390 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூபாய் 24.96 லட்சமாகும். இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.