திருச்சியில் பரபரப்பு.ரெயில் முன் பாய்ந்து
பெண் தற்கொலை.
கடன்கொடுத்தவர்கள் முற்றுகையிட்டதால் விபரீத முடிவு.திருச்சி மார்ச் 5:
திருச்சி, திருவானைக்கோவில் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் லண்டனில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி இந்துமதி (வயது 50).
தங்கவேல் லண்டனுக்கு செல்வதற்கு முன்பு பல பேரிடம் கடன் பெற்றுள்ளார். கடன் கொடுத்தவர்கள் இந்துமதிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனம் உடைந்த இந்துமதி திருவானைக்காவல் கந்தன் நகர் பகுதியில் நேற்று இரவு சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.
இது பற்றி தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் வரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.