திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய திருமதி. அபிராமி அவர்கள் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் நமது *T நியூஸ் செய்தி எதிரொலியாக* கோயம்புத்தூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை நிலமெடுப்பு பணிக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் கடந்த 16-02-2024 அன்று கோயம்புத்தூருக்கு பணியிட செய்யப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்கள் காஜாமலை பகுதியில் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வீட்டினை கடந்த 15 நாட்களுக்கு மேலாக காலி செய்யாமல் போக்கு காட்டி வருவதாக ஆட்சியரக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தனது பணி காலத்தில் நடைபெற்ற விசாரணை கோப்புகளுக்கு உரிய உத்தரவு எதுவும் இதுவரை வழங்காமல் கோப்புகள் பலவும் முகாம் அலுவலகத்தில் கிடப்பதாகவும் மற்றும் திருச்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ராஜலட்சுமி அவர்கள் சுற்றுலா மாளிகையில் தங்கி தினமும் அலுவலகப் பணியை செய்து கொண்டு அவதிக்குள்ளாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.. நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்