சினிமா திரைப்படங்களில் வரும் நிழல் உலக தாதா போல் கைபேசி மூலமாக வட்ட அலுவலக பணியாளர் ஒவ்வொருவருக்கும் வாய்மொழி உத்தரவு கொடுத்தும், பல லட்சங்களை வாரி வழங்கி முறைகேடான காரியத்தை சாதித்த கோட்ட ஆய்வாளர்….
திருச்சியிலிருந்து சமீபத்தில் தலைநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட கோட்ட ஆய்வாளரும், முட்டை பெயர் போன மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட கோட்ட ஆட்சித் தலைவரும் கூட்டாக சேர்ந்து கடந்த வாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக உத்தரவு வழங்கிய விவகாரம் மாவட்ட அலுவலகத்தில் பேச்சு பொருளாகியுள்ளது.
திருச்சியில் நடக்கும் நிலம் தொடர்பான பெரும்பாலான பஞ்சாயத்தில் தாமாகவே மூக்கை நுழைத்துக் கொள்ளும் கோட்ட ஆய்வாளர், அதற்காக தன் வசிய பேச்சால் மாவட்ட அலுவலர் முதல் மண்டல துணை அலுவலர் வரை அனைவரிடத்திலும் பல லட்ச பணத்தைக் கொண்டு, எப்படிப்பட்ட தவறையும் செய்து முடித்து விடலாம் என எண்ணி பல வட்ட அலுவலகங்களில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
இவரை எதிர்த்தாலோ அல்லது சொல்லி எதுவும் செய்யாவிட்டால், அடுத்த விழப்போகும் விக்கெட் நாமாக இருக்கக் கூடும் என்ற அச்சத்திலேயே தவறுகளை செய்யும் அளவை பணியாளர்கள்.
திருச்சி மையப் பகுதியில் இயங்கும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஏற்கனவே மாவட்ட பெண் அதிகாரியின் பெயரைச் சொல்லி பல லட்சங்களை சுருட்டிய விவகாரத்தை நம் T நியூஸ் செய்தி விரிவாக வெளியிட்டிருந்த நிலையில், திரும்பவும் அதே நிறுவனத்திடம் பல லட்சங்களை வாங்கிக் கொண்ட கோட்ட அதிகாரி, முறைகேடான பட்டாவை வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலக ஓட்டுனரின் சகோதரர் மூலமாக வட்ட அலுவலகத்தில் பணி செய்யும் ஒவ்வொருவருக்கும் பல லட்சங்களை சப்ளை செய்து உள்ளார்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், கணினி பட்டாவில் உள்ள தவறுகளை திருத்தம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலக அலுவலர்களின் அறிக்கையும், மனுதாரரின் நேரடி விசாரனை வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்தந்த கோட்டத்திற்கான ஆட்சியர் அவர்களால் கணினி சிட்டாவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஆணை வழங்கப்படும் என்ற விதியை மாற்றி இதுவரை தமிழ்நாட்டில் எந்த கோட்டத்திற்கான ஆட்சியர்கள் செய்யாத ஒரு வேலையை திருச்சியில் நடைபெற்றதாக தகவல்…
இது தொடர்பாக கோட்ட அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரியிடம் கேட்ட போது…
திருச்சி கோட்டத்தில் லட்சங்களை வாங்கிக் கொண்டு கோயில் நிலங்களுக்கு போலி பட்டா வழங்கிய விவகாரம் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்ற இந்த நேரத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கான முன்னாள் கோட்ட ஆய்வாளரும் மற்றும் கோட்டத்திற்கான ஆட்சியரும் கூட்டாகச் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக சம்பந்தப்பட்ட வட்ட அலுவலர்களின் அறிக்கையும் இல்லாமல், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் பட்டாவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஆணை வழங்கியும், கோட்ட ஆட்சியரின் உத்தரவு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகத்திற்கு முறையாக தபால் வழியாக செல்லாத நிலையில் கோட்ட ஆய்வாளர் செல்போனில் புகைப்படமாக எடுக்கப்பட்ட உத்தரவு நகலை அடிப்படையாகக் கொண்டு கணினியில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு அதிகாரிகளையும் அடிக்கடி
கோட்ட ஆய்வாளர் கைபேசியில் தொடர்பு கொண்டு
நிர்ப்பந்தம் செய்து முறைகேடான செயலை செய்து முடித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆதார ஆவணங்களுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த அதிரடி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கும் மாவட்ட நிர்வாகம்.,.