திருச்சி பிப்.24-
திருச்சி கோட்டை போலீசார், திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகாமையில் வாகன சோதனையில் நிறுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது கார் டிக்கியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், விமல் போன்ற புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.உடனே போலீசார் காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம் அங்கோடியா பகுதியை சேர்ந்த சுனில் குமார் (வயது) 23 )என்பவரை கைது செய்தனர்.பின்னர் அந்த சொகுசு காரை பறிமுதல் செய்து அதில் கடத்திவரப்பட்ட ஹான்ஸ் மூட்டை 20, 20 கூலிப் மூட்டைகள், 20 மூட்டை விமல் புகையிலை உட்பட மொத்தம் 422 கிலோ எடை கொண்ட ரூபாய் 2 லட்சத்து 72 ஆயிரத்து 880 மதிப்பிலான 60 மூட்டை குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. சேர்ந்த கிஷோர் குமார் ,திருச்சியை சேர்ந்த இம்ரான் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.