திருச்சி கன்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை துணையுடன் ஜங்ஷன் பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்த அலிஃப் டீக்கடை…*
நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்து விட்டு மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது..
திருச்சி மாநகரம், கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பறவைகள் சாலை மற்றும் ஜங்ஷன் சாலை சந்திப்பு சாலையில் அன்லிமிடெட் வர்த்தக கட்டிடத்திற்கு எதிரில் உள்ள அலிப் என்கிற தேநீர் கடை செயல்பட்டு வருகின்றது.
இந்த டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் பிரதான சந்திப்பு சாலையை முழுவதும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி விடுவதால் அவ்வழியாக செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தினமும் காலை முதல் இரவு வரை இந்த சாலையானது இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிப்பு செய்யபடுகிறது. இதனால் வழியாக வாகனங்களில் ஜங்ஷன் சாலைக்கு செல்ல நினைப்பவர்கள் எதிர் திசையில் (one way) செல்வதால் எதிரே ஜங்ஷன் சாலையில் இருந்து பறவைகள் சாலைக்கு திரும்பும் வாகனங்களில் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது.
மேலும் இந்தப் பகுதியானது R.C. பள்ளி, ஜேம்ஸ் பள்ளி, வாசவி வித்தியாலய பள்ளி, வணிக வளாகங்கள்,பெரு நிறுவனங்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும்.
மேலும் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரத்திலும் இந்த தேநீர் கடையின் முன்பு உள்ள சாலை முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கடும் மன உளைச்சல் உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்களை உருவாக்கும்,போக்குவரத்து நெரிசலை உருவாக்கும், சாலையை ஆக்கிரமிக்கும் அலிப் தேநீர் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாது, பிரதான சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை…..