திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் திருக்கோவிலில் அன்னதான கூடம் கட்டுவதற்கு முறையான விதிமுறைகளும் மற்றும் நாளிதழில் டெண்டர் அறிவிப்பு வெளியிடாமல் தன்னிச்சையாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளில் அதிகாரப் போக்கில் தனிப்பட்ட முறையில் தனக்கு வேண்டியவருக்கு கட்டுமான ஒப்பந்தத்தை கோயில் நிர்வாகம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு மட்டுமல்லாது சனிப் பெயர்ச்சி விழாவின் போது வைக்கப்பட்ட சிறப்பு உண்டியல் அரசின் விதியின்படி பூட்டி சீல் வைக்காமல் சாதாரண பூட்டு போடப்பட்டு சாவி நிர்வாக அதிகாரி வசம் இருந்தது. அவ்வப்போது சிலர் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இது பக்தர்களிடையே பேசும் பொருளாகி இருந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு விரிவான புகார் சென்ற நிலையில் சீல் வைக்கப்படாமல் இருந்த சிறப்பு உண்டியலினை உடனே அகற்ற உத்தரவிட்டிருந்தார்.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு எந்தவித விதிமுறைகளும் பின்பற்றாமல் தன்னிச்சையாக அன்னதான கூடம் கட்டுமான ஒப்பந்தத்தை அரசியல் பிரமுகரின் பினாமி பெயருக்கு கொடுத்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா என பக்தர்கள் எதிர்பார்ப்பு.