திருச்சி, பிப். 12:
திருச்சி பன்னாட்டு விமான நிலயைத்தில், அரபுநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 37.39 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் உடலுக்குள் (அடிவயிற்றில்) மறைத்து பசைவடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை மூலம் தங்கத்தை வெளியே எடுத்ததில், அவர் ரூ. 37.39 லட்சம் மதிப்பிலான 580 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை திங்கள்கிழமை கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல்செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்