திருச்சி பிப் 12- திருச்சி ஜாபர்ஷா தெரு,கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா (வயது 14) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023 ம் ஆண்டு நிமோனியா காய்ச்சல் வந்து கடுமையாக பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குணமாகி வந்த பிறகு அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று எருக்கன் செடியை சாப்பிட்டதால் கால் வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து ஸ்வேதா ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஸ்வேதா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.