ஆ.ராசா எம்பி மீது அதிமுகவினர் புகார்.
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்தனர். திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் இன்று காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி திமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ ராசா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார் . வழக்கு பதிவு செய்ய வேண்டும், மேலும் அந்த பதிவினை அகற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மனு அளித்த போது வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயராமன், சுரேஷ், தினேஷ்பாபு, செல்வராணி, புவனேஸ்வரி, சாகர், மகாலட்சுமி, சந்திர மோகன், அனந்தகிரி, அகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.