திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் வையம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் கோவில்பட்டியில் உள்ள பாலமுருகன், சரஸ்வதி, வீரபத்திரர், எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்றுநடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைப்பு கிராம தெய்வங்களுக்கு கனிவைத்து வழிபாடு செய்யப்பட்டது.
பிறகு வினைதீர்க்கும் விநாயகர் அனுமதியுடன் மகா சங்கல்பம் வருண வழிபாடு வாஸ்து சாந்தி பிரதேசப்பள்ளி கொடுக்கப்பட்டு மாலை 7 மணிக்கு பரிவார தெய்வங்களின் சக்தியை திருக்குடத்தில் எழுந்தருள செய்து முதல் காலையாக வேள்வி தொடங்கப்பட்டது வேதிகாரச்சனை, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பஞ்ச சுத்த ஹோமம் நவக்கிரக ஹோமம் பூர்ணாஹதி மகா தீப ஆராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை காலை 9 மணிக்கு மேல் மங்கள வாத்தியம் வழங்க புனித தீர்த்தக்குடைய யாத்திரை அனுமதி பெற்று கலசங்கள் விமானம் சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று
காலை 9 மணிக்கு மேல் 10.05 மணிக்குள் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்த கோவிலுக்கு வையம்பட்டி திண்டுக்கல் புதுக்கோட்டை மதுரை பழைய ஜெயங்கொண்டம் பெரியகுளம் கரூர் ஆகிய ஊர்களில் இருந்து ஆகிய ஊர்களில் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு குலதெய்வமாக இருப்பதால் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதான விருந்து நடைபெற்றது. அன்னதானத்தில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மண்டல பூஜை நிறைவு நாளனான வருகிற 29ந்தேதி பிரபல திரைப்பட பின்னணி பாடகர்கள் செந்தில்குமார் ராஜலட்சுமி ஆகியோர் நடத்த இருக்கிறார்கள்
விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்க்காரர்கள், பக்தர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.