ஒன்பது வருடங்களாக ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கும் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் புகார் மனு சென்றது..!!
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரியும் இரா. அபிராமி அவர்கள் கடந்த 2015 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சி மாவட்ட ஆய்வு குழு அலுவலராக பணியில் சேர்ந்தார். இதில் ஒரு வருடம் 7 மாதங்கள் பணி செய்த பிறகு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) பணியிட மாற்றம் செய்யப்பட்டு இதில் ஒரு வருடம் 4 மாதங்கள் பணி செய்த பின்பு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி ஆவினில் மாவட்ட வருவாய் அலுவலராக பணி செய்து வந்த நிலையில் அதன் பிறகு இவரை கடந்த 15-06-2022 தேதி முதல் மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த ஒரு வருடம் 7 மாதங்களாக தொடர்ந்துபணியில் இருந்து வரும் நிலையில் மொத்தம் ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் அரசு பணியில் இருந்து வருவதும், அதுவும் தான் படித்து வளர்ந்த மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தற்போது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வரும் அதிகாரிகளை வேறு மாவட்டத்திற்கு
இடமாற்றம் செய்ய வேண்டுமென அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதில் முக்கிய குறிப்பாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாவட்ட அளவிலான அதிகாரிகளையும் மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகளையும் ஜனவரி 31 ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணையம் கெடு விதித்து இருந்தது.
மேற்படி தேர்தல் ஆணைய உத்தரவுப்படி மாவட்ட வருவாய் அலுவலர் அளவிலான அதிகாரிகளுக்கு கடந்த வாரம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கு மட்டும் திருச்சி மாவட்ட முக்கிய அமைச்சரின் தயவில் தலைமைச் செயலக மூத்த அதிகாரியிடம் பேசி பணியிட மாறுதலில் தன் பெயர் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் விரிவான புகார் மனு ஒன்றினை மத்திய தேர்தல் ஆணையத்திற்கும் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…