திருச்சி மாவட்ட பெண் அதிகாரியின் பெயரை சொல்லி பிரபல ரியல் எஸ்டேட் அதிபரிடம் 15 லட்சம் ஆட்டைய போட்ட சர்வே அதிகாரி….
பிரபல ரியல் எஸ்டேட் அதிபரிடம் 15 லட்சம் ஆட்டைய போட்ட சர்வே அதிகாரி….
திருச்சியில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது பல்வேறு சிக்கல்களில் சிக்கி பத்திரப் பதிவு செய்ய முடியாமல் முடங்கி கிடக்கும் வேலையில் தங்களுக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் சென்று உள்ளனர்.
சம்பந்தப்பட்ட வட்டாட்சியரோ, ஆவணங்கள் சரியாக இல்லாத காரணத்தினால் பட்டா வழங்க முடியாது என தெரிவித்த வேலையில்
ரியல் எஸ்டேட் அதிபர் மாவட்ட சர்வே அதிகாரியை சந்தித்து தங்கள் குறைகளை சொல்லி உள்ளனர்…..
அவரோ மாவட்ட பெண் அதிகாரி மூலம் பட்டா பெற்று தருவதாக சொல்லி ரூபாய் 15 லட்சம் பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் மாவட்ட பெண் அதிகாரிக்கு மிகவும் தெரிந்த நபருக்கான பட்டா என சொல்லி வட்டாட்சியருக்கு ஒன்றும் கொடுக்காமல் மாவட்ட பெண் அதிகாரி பெயரை மட்டும் சொல்லி நெருக்கடி கொடுத்து பட்டா வாங்கி கொடுத்து உள்ளார்..
பட்டா கொடுத்த வட்டாட்சியர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் சென்று கொடி நாள் வசூல் சம்பந்தமாக பணம் கேட்ட போது ஏற்கனவே 15 லட்சம் வாங்கி விட்டு திரும்ப வந்து பணம் கேட்டால் எப்படி….! எனக் கேட்டுள்ளார்
ஏமாந்து போன வட்டாட்சியர் வெளியே சொல்ல முடியாமல் புலம்பிக் கொண்டு உள்ளார்…