Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு

0

திருச்சி மத்திய சிறைக் கைதியொருவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை பூர்வீகமாகக் கொண்டவர், பா.ராமச்சந்திரன் (77). திருச்சி வயலூர் சாலை சண்முகாநகர் 9 ஆவது குறுக்குத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய அவர், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜூலை 19 ஆம் தேதி அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மூச்சுத்திணறலுக்காக சிகிச்சை பெற்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கே கே நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்