அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அதிமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்த மசூதனன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூட்டப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அவைத் தலைவராக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் அதிமுக ஆட்சியில் வக்ஃபு வாரியத் தலைவராக பதவி வகித்திருக்கிறார்.
அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேனுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.