Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி சிட்டி நியூஸ் 5/2/2023

0

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி அமலா (வயது 33) இவர்களுக்கு ராதிகா (வயது 12) ராஜேஸ்வரி (வயது 4)என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கலியன் இறந்து விடுகிறார். இநநிலையில் அமலா தனது குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள சகோதரர் நடராஜன் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று தனது மற்றொரு தங்கை வீட்டுக்கு சென்று வருவதாக கூறி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பல இடங்களில் தேடிப் பார்த்தால் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது அண்ணன் நடராஜன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து அமலா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை தேடி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி உறையூர் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம்.இவரது மகன் நிஷாத் (வயது 15) இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்துஅவரது தாய் செல்வமணி உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாத்தை தேடி வருகின்றனர்.

 

திருச்சியில் 2 பேரிடம் ரூ10 லட்சம் பண மோசடி

– திருச்சி தென்னூர் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 59) இவர் ஆன்லைனில் ஒரு தனியார் வங்கியில் ரூ 4 லட்சத்து,99 ஆயிரத்து 999 பணத்தை முதலீடு செய்தார். இந்நிலையில் அவருடைய வங்கி கணக்கில் இருந்த இந்த பணத்தை திடீரென்று தனியார் வங்கி மற்றவருடைய வங்கி கணக்குக்கு இந்த பணத்தை மாற்றம் செய்து உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் உடனடியாக ஆன்லைனில் அந்த தனியார் கம்பெனிக்கு தகவல் கேட்டுள்ளார் ஆனால் எந்தவித பதிலும் தரப்படவில்லை. இதைத்தொடர்ந்து சீனிவாசன் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரில் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று திருச்சி ரெயில்வே சொசைட்டி காலனி சக்தி நகர சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 43 )இவர் பகுதி நேர வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவருக்கு ஒரு மர்ம ஆசாமி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ரூபாய் 1000 பணம் டெபாசிட் செய்தால் ரூபாய் 300 வட்டியாக வழங்கப்படும். இதனை நீங்கள் பகுதி நேர வேலையாக செய்யலாம் என கூறி உள்ளார்.அந்த மர்ம ஆசாமியின் பேச்சை நம்பிய ஜீவானந்தம் முதலில் ரூபாய் ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமியின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து ஜீவானந்தத்திற்கு வட்டியாக ரூபாய் 300 திருப்பி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பிறகு மீண்டும் போனில் பேசிய மர்ம ஆசாமி நீங்கள் லட்சக்கணக்கில் பணம் போட்டால் உங்களுக்கு நிறைய வட்டி பணம், பரிசுகள் கிடைக்கும் என்று ஏமாற்றி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஜீவானந்தம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 5 லட்சத்த்து 79 ஆயிரம் பணத்தை இந்த மர்ம ஆசாமியின் செல்போன் நம்பருக்கு போட்டு உள்ளார்.பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் வட்டி பணத்தையும் தரவில்லை,அசல் பணத்தையும் தரவில்லை. அந்த நம்பருக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவானந்தம் இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமியை வலை விசி தேடி வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ

திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா
இவரது மனைவி காமாட்சி (வயது 65)
இவர் தனது உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றார். அப்போது தனது மருமகளின் 5 பவுன் செயினை வாங்கி அணிந்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சில் வந்து இறங்கியபோது அருகில் இருந்த உறவுக்கார பெண்மணி காமாட்சியிடம் கழுத்தில் கிடந்த செயின் எங்கே? என கேட்டுள்ளார். உடனே பதறி அடித்துக் கொண்டு காமாட்சி அந்த பஸ் முழுவதும் தேடியுள்ளார். ஓடும் பஸ்சில் மர்ம ஆசாமிகள் அவரது செயினை
அபேஸ் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவரது மகன் பொன்ராஜ் கண் டோமெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்