Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி சிட்டி நியூஸ்

0

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி 2 வாலிபர்கள் பலி

திருச்சி ஜன 23- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியை அடுத்த பாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் காளிமுத்து (வயது 37).இவரது நண்பர் பழனியப்பன் (வயது 28) இருவரும் இன்று காலை திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் பகுதியில் கட்டிட வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தனர். இவர்கள் வந்த வாகனம் திருச்சி அருகே உள்ள மணிகண்டம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் அருகே உள்ள சீரா பள்ளி என்ற இடத்தில் அருகே வரும் பொழுது எதிரே நாகமங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு வாலிபர் நேருக்கு நேராக எதிரே வந்த காளிமுத்து மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இந்த விபத்தில் காளிமுத்து மற்றும் பழனியப்பன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதே போன்று எதிரே மோதிய மற்றொரு வாகனத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 28)மற்றும் அவரது தங்கை மகள்கள் இரண்டு சிறுமிகள் பலத்த காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனைக்குசெல்லும் வழியில் காளிமுத்து பரிதாபமாக இறந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பாலாஜி பரிதாபமாக இறந்தார் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு சிறுமிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும்காளிமுத்து உடன் மோட்டார் சைக்கிளில் வந்த பழனியப்பன் கால் முறிவு ஏற்பட்ட தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் பாலாஜி மோட்டார் சைக்கிளில் வந்த போது திடீரென்று டயர் வெடித்தது. இந்தநிலையில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துள்ளானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அருகே பட்டப்பகலில் 2 இரு சக்கர வாகனங்கள் நேர்க்கு மோதி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் மணிகண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து
டிரைவர் உயிர் தப்பினார்

தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த குமரவேல்(வயது21) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் குமரவேல் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் வைக்கோல் கட்டுகள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் மிஷின் மூலம் சரக்கு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில்
ரூ7.73 லட்சம் மதிப்புள்ள வௌிநாட்டு பணம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா இன்று திருச்சி் வந்தடைந்தது. அப்போது பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் சந்தேகத்திற்கு இடமான ஆண் பயணியிடம்
சோதனையிட்டனர். அப்போது செருப்புகளில் வௌிநாட்டு நாணயத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் அமெரிக்க டாலரின் மதிப்பு 9ஆயிரத்து 600 வௌிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. இந்திய நாணய மதிப்பு 7 லட்சத்து 73 ஆயிரத்து 280 ரூபாய் ஆகும். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் ஆண் பயணியிடமிருந்து கைப்பற்றினர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் 2 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 43) இவர் திருச்சி காட்டூரில் ஒரு வேலை விஷயமாக வந்துவிட்டு மீண்டும் சென்னை செல்ல ஆட்டோவில் புறப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பிச்சை நகர் பகுதியில் ஆட்டோ வந்த பொழுது திடீரென்று ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் வந்த ஒரு வாலிபர் ஆட்டோவை நிறுத்தி சதீஷிடம் தகராறு செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் சதீஷ் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற ஆட்டோ டிரைவர் மற்றும் மற்றொரு வாலிபரை தேடி வருகின்ற

அரியமங்கலத்தில் வேன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை தாய் இறந்த துக்கத்தில் விபரீதம்

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் கிஷோர் (வயது 24)அண்மையில் இவரது தாய் இறந்து விட்டார். இந்த நிலையில் சோகத்தில் இருந்த கிஷோர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் இருந்த விட்டதில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்க அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தரப்பில் ஒரே ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும்திருச்சியில் அண்ணாமலை பேட்டி

சென்னையில் இருந்து விமான மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருச்சி வருகை புரிந்தார் திருச்சி விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

எங்கள் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி. ஈரோட்டில் அதிமுக பலமுறை ஜெயலித்து உள்ளது. பலர் அமைச்சர்களாக இருந்து உள்ளனர். அதிமுக தரப்பில் ஒரே ஒரு வேட்பாளர் தான் நிற்க வேண்டும். அவர் பின்னால் அனைவரும் அணிவகுத்து நிற்க வேண்டும்.. வாக்குகள் பிரியும்போது வெற்றி கிடைக்காது. அதிமுக நிறுத்தும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற எல்லாவிதமான அஸ்திரங்களையும் கொடுக்கவேண்டியது எங்கள்க கடமை. கூட்டணி மரபு, தர்மப்படி அனைவரும் நடந்து கொண்டால் தான் கட்சிகளுக்கு மரியாதை.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சில பிரச்னைகளை கூறி இருக்கிறார். காங்கிரசில் பிரச்னை பெரிய அளவில் இருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் பாஜகவை குற்றம் சொல்லலாம். ஆனால் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவரே அவர் பின்னால் நிற்பரா என்பது தெரியவில்லை. அதிமுக தரப்பில் நிற்கும் வேட்பாளருக்கு திமுக காங்கிரஸ கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க கூடிய தகுதி அவருக்கு இருக்க வேண்டும். இடைத்தேர்தல் என்பது கட்சிகளின் பலத்தை காட்டும் தேர்தல் அல்ல. போட்டியிடக்கூடியவர் அதிகார பலம், பணபலத்தை முறியடிக்க கூடியவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.பேடியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த பேட்டியின் மூலம் எடப்பாடி, ஓபிஎஸ் இருவருக்கும் மறைமுகமாக அண்ணாமலை ஒரு நிபந்தனை விதித்து உள்ளார். அதில் இருவரும் சேர்ந்து ஒரே வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்று கூறியதன் மூலம் அவர் இரு அணிகளும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்ற கண்டிஷனை மறைமுகமாக விதித்து உள்ளார். அதே நேரத்தில் அங்கு பா.ஜ.க. போட்டியிடும் நிலையில் இல்லை என்பதையும் மறைமுகமாக கூறி விட்டார். எனவே அதிமுக -பாஜ.க. கூட்டணியில் இன்னும் குழப்பமான நிலை தான் நீடிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்