பாலக்கரையில் ஆட்டோவில் இருந்த பேட்டரி மாயம் திருச்சி ஜன20- திருச்சி பாலக்கரை ஆலம்தெருவை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 56).
சம்பதவன்று இவர் வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தி உள்ளார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ ஆட்டோவில் இருந்த பேட்டரியை திருக் கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்து பாலக்கரை போலீசில் பக்ருதீன் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவில் இருந்த பேட்டரி திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவரங்கத்தில்
தொண்டு நிறுவனத்தில் இருந்த
2 மாத பெண் குழந்தை மூச்சு திணறி சாவு
திருவரங்கம் மாம்பழச்சாலையில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நித்ராஎன்ற 2 மாத குழந்தை புதுக்கோட்டை மாவட்ட நலப்பணி குழு சார்பில் இங்கு சேர்க்கப்பட்டு கவனித்து வந்தனர். இந்த நிலையில் நித்ராவிற்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து நித்ராவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்குசிகிச்சை பெற்று வந்த நித்ரா திடீரென்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
வீட்டுக்குள் பிணமாக கிடந்த வாலிபர்
திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ், இவரது மகன் தேவ ஆனந்த் (வயது 44) இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். சம்பவத்தன்று இவரது தாய் இந்திரா நவல்பட்டில் உள்ள மற்றொரு மகன் வீட்டிற்கு சென்று தங்கி விட்டார்..இந்நிலையில் வீட்டில் தேவ் ஆனந்த் மட்டும் தனியாக இருந்துள்ளார்.இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த நபர்க்கு தேவ் ஆனந்த் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர் உடனடியாக நவல்பட்டில் இருந்த தேவ் ஆனந்த்தின் தாய் இந்திராவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து இந்திரா உடனடியா வீட்டிற்கு சென்று பார்த்தபோது தேவ் ஆனந்த் அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்திரா உடனடியாக கன்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவ ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் வாலிபரை அடித்து கொலை செய்த நபர் சரண்
திருச்சி உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் சீனிவாசன் (வயது 25) இவர் பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் லோடு இறக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 13ந் தேதி சீனிவாசன் திடீரென மாயமானார். இதைத் தொடர்ந்து அவரது தந்தை மோகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த டிசம்பர் 26ந் தேதி தனது மகனை கண்டுபிடித்து தர கேட்டு இலவச சட்ட உதவி மையத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டது.
கொலை செய்தது அம்பலம்
இந்த நிலையில் போலீசார் சீனிவாசனின் செல்போனை கண்காணித்து வந்தனர் அந்த செல்போனை கடலூரை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தி வந்தது தனிப்படை போலீசார் கண்டுபிடித்து அந்த வாலிபரை பிடித்து இந்த செல்போனை யாரிடம் இருந்து வாங்கினீர்கள் என்று கேட்டு விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் அந்த வாலிபர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல் கபூரிடமி ருந்து ரூபாய் 2 ஆயிரம் பணம் கொடுத்து செல்போனை வாங்கினேன் என்று கூறினார்.
இதை யடுத்து போலீசார் அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் பஷீர் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்த நிலையில் அவர் தாமாக முன்வந்து நேற்றைய தினம் உறையூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.
பின்னர் போலீசாரிடம் அப்துல் கபூர் அளித்துள்ள வாக்குமூலத்தில் நானும் சீனிவாசனும் மது அருந்திவிட்டு பால்பண்ணை மேம்பாலத்தில் சென்றபோது அப்போது அவரது செல்போனை நான் பறித்தேன்.இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் சீனிவாசனின் தலையைப் பிடித்து பாலத்தின் தடுப்புச் சுவற்றில் இடித்ததில் சீனிவாசன் மயங்கி விழுந்துவிட்டார். பின்னர் நான் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டேன்.
பின்னர் சீனிவாசன் இறந்து போனது எனக்கு தெரிய வந்தது. இதற்கிடையே திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அடையாளம் தெரியாத நபர் வாகன விபத்தில் இறந்து விட்டதாக வழக்கு பதிவு செய்து வழக்குகை முடித்து இருந்தனர். இந்த நிலையில் 8 மாதத்துக்கு பிறகு தற்போது சீனிவாசன் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி
இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். அதன் மூன்றாம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது .இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார்.
அது தொடர்பாக இன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அஜந்தா ஓட்டலில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய இணை மந்திரி எல் முருகன் கலந்து கொண்டு ரெயில்வே சுங்கத்துறை ,கலால் துறை ,விமானத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறை சார்ந்த 129 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார் .பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் 17ந் தேதி அன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி விழா பேருரை ஆற்றும் போது இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார் .அதன்படி கடந்த அக்டோபர் 22ந் தேதி 75 ஆயிரம் பேருக்கும் அதன் பின்னர் நவம்பர் 22ந் தேதி 71 ஆயிரம் பேருக்கும் பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கினார் இன்றைய தினம் மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் புதிதாக பணியில் சேரும் ஒன்றரை லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் முகாமையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தற்போது புதிதாக வேலையில் சேர்ந்துள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் தேச முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். 2047-ம் ஆண்டில் நாடு மிகப்பெரிய வல்லரசாக திகழவும் சுய சார்புடன் இருக்கவும் இந்த இளைஞர்கள் பணியாற்ற வேண்டும்.
மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்
இவ்வாறு மத்திய மந்திரி முருகன் கூறினார்.
இந்நிகழ்வில், சுங்க வரித்துறையின் திருச்சி மண்டல ஆணையர் அணில் வரவேற்றார். மூத்த சுங்கவரித்துறை அதிகாரிகள் மற்றும் வணிகவரித் துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முடிவில் சுங்கவரித் துறையின் இணை ஆணையர் பிரதீப் நன்றி கூறினார்.
திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த
கார் டிரைவருக்கு 20 ஆண்டு கடுங்காவல்
திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
திருச்சி தாராநல்லூர் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 22.). கார் டிரைவராக இந்த இளைஞர் கேட்டரிங் வேலையும் செய்து வந்தார் இந்த நிலையில் கடந்த 2020 மார்ச் 16ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். மாலையில் வீடு திரும்பிய அந்த சிறுமியின் தாயார் மகள் சோர்வாக இருப்பதைக் கண்டு கேட்டபோது நடந்த சம்பவங்களை அழுதபடி தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு திருச்சி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரசு வழக்கறிஞராக அருள்செல்வி வாதாடினார் இந்த நிலையில் இன்று நீதிபதி ஸ்ரீ வர்ஷன் இன்று தீர்ப்பளித்தார்.
அதில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் எண்ணத்தில் கடத்திச் சென்றதற்காக ஐந்து ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டதால் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் மேலும் குற்றச்சாட்டப்பட்டவர் 7000 அபராதம் விதிக்கப்பட்டது அது மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி