திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் (தனியார்) வரசுதர்சன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வடக்கு சித்திரை விதியில் உள்ள அவரது வீட்டுக்கு திருவரங்கம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் திருவேங்கடம், மிலிட்டரி நடராஜன், சதீஷ் மற்றும் இரண்டு பெண்கள் அங்கு சென்று வீட்டில் இருந்த சுதர்சனர்யிடம் எங்களுக்கு ஏன் சொர்க்கவாசல் பாஸ் தர வில்லை என்று கேட்டு தகராறு செய்து சுதர்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் இணை கமிஷனர்மாரிமுத்து திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.