திருச்சி டிச25-திருச்சி பெரிய கடைவீதி அல்லிமால் தெருவை சேர்ந்தவர் சத்தியன் இவரது மனைவி சுகன்யா (வயது 29) சம்பவத்தன்று இவருக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாமல் போனது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பிறகு சில நாட்களுக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போனது இதைய டுத்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டரிடம் காண்பித்த போது டாக்டர் சுகன்யாவை பரிசோதனை செய்து பார்த்து அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். பிறகு அறிவுரை கூறி சுகன்யாவை தாய் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுகன்யா சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.