இது பெரியார் மண் அல்ல தேவரின் மண் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில், தேவர் திருமகனாருக்கு மலர் மாலை செலுத்தி , அங்குள்ள பூசாரி கொடுத்த திருநீறை சொல்லி வைத்தது போல, மிக பவ்யமாக தனது நெற்றியில் பூசிக் கொண்டார்..
இந்த செயல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பசும்பொன்னில் தேவர் சன்னதி முன்பு தனது நெற்றியில் பள பளவென்று திருநீறை பட்டை பட்டையாக பூசிக் கொண்டதின் எதிரொலியாகும்.
ஆக இதுவரை தங்களது நெற்றியில் யாராவது விபூதியோ, குங்குமமோ பூசினால் உடனே அழிப்பவர் வாரிசு, இன்று தானாகவே அதை பெற்று கொண்டு அழிக்காமல், அப்படியே அமைதியாக இருந்தது, தேவர் திருமகனார் மீதும் அவர் சார்ந்திருக்கும் முக்குலத்தோர் மீதும் அவர்தம் வாக்குகளின் மீதான பய உணர்ச்சியே காரணம்..
அடுத்தது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூசிக் கொண்ட பின், இவர் பூசாமல் சென்றால், அது பொது வெளியில் பேசும் பொருளாகி விடும் என்பதும் ஆகும்..
திமுகவினரின் இப்போதைய செயல்கள் குறித்து, காலம் சென்ற துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் அப்போதே சொல்லி கிண்டல் அடித்து இருக்கிறார்.
அதாவது, இந்துக்களுடைய வாக்குகள் திமுகவிற்கு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், திமுகவினர் கோயிலுக்கு சென்று அலகும் குத்திக் கொள்வார்கள்.. பால் குடமும் எடுப்பார்கள்.. காவடியும் தூக்குவார்கள் என்பதுதான் நினைவுக்கு வருகிறது..
திமுக அப்போதைக்கப்போது தனது வேஷத்தை மாற்றிக் கொள்வதற்க்கு மறு பெயர்தான் திராவிட மாடல் என்பதாகும்…. பெரியார் மண் என்று கூறிக்கொண்டு சுற்றித்திரிந்த வீரமணியை காணவில்லை கண்டால் வரச் சொல்லுங்கள்