Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மகளின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

0

திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா.இவரது மனைவி சித்ரா (வயது 48).இவர் சென்னை சிங்கப்பூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தி வருவதோடு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் சித்ரா இன்று மாநகர துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது;-
பல்வேறு தொழில்களை நடத்தி வரும் நான் மக்கள் பார்வை என்ற பெயரில் சமூக கல்வி அறக்கட்டளை மற்றும் யூட்யூப் சேனல் நடத்தி வருகிறேன்.
இந்த நிலையில் என்னுடைய அறக்கட்டளையில் கோவை அவிநாசியை சேர்ந்த சூசை மேரி, அவரது கணவர் லூயிஸ் புஷ்பராஜ், சென்னையைச் சேர்ந்த ஜெனிஃபர் தனம், மதுரையைச் சேர்ந்த நிர்மலா ஆகியோர் தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் வீட்டு வேலைக்காக அழைத்துச சென்று சிங்கப்பூரில் பாலியல் தொழிலுக்கு தள்ளி விடப்பட்ட ஒரு பெண் தன்னிடம் உதவி கேட்டார். அவருக்கு ஜெனிபர் தனம் மூலமாக ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தப் பணம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போய் சேரவில்லை. அதேபோன்று ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பின்னர் கடலூர் மாவட்டத்தில் உள்ள 100 இருளர் இன குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு ரூ. 40,000 பணம் பல்வேறு தவணைகளில் இந்த தன்னார்வலர்களிடம் கொடுத்தேன். இந்தத் தொகையும் அந்த குழந்தைகளுக்கு போய் சேரவில்லை.இது பற்றி கேட்டபோது அவர்கள் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். இது தொடர்பாக பாண்டிச்சேரி லாஸ்பேட்டை போலீசார் சூசைமேரியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே என்னுடன் பழகிக் கொண்டு இருந்தபோது மேற்கண்ட நான்கு பேரும் எனது செல்போனில் இருந்த லண்டனில் படிக்கும் எனது மகள், சென்னையில் படிக்கும் எனது மகன் ஆகியோரின் புகைப்படங்களை டவுன்லோட் செய்து உள்ளனர். இப்போது மகளின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்கள்.
வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டுகிறார்கள்.
சமூகத்தில் அந்தஸ்தாக இருக்கும் நபர்களிடம் பழகி இதுபோன்று பணம் பறிப்பதையே அவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட சூசைமேறி, அவரது கணவர் லூயிஸ் புஷ்பராஜ் ,சென்னை ஜெனிபர் தனம், நிர்மலா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்