ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி சிவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள அய்யனார் மாநகராட்சி உயர்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரம் உயர்த்த வேண்டும். ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடம் அமைத்து தர வேண்டும். மழைக்காலங்களில் ரெங்கநாதர் கோவில் ரெங்கா, ரெங்கா கோபுரம் முன்புறம் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சர்வேஸ்வரன், ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தீப்பு, மாவட்ட துணை தலைவர்கள் திருவேங்கட யாதவ், பழனி முருகன்,
மண்டல் துணைத்தலைவர் ராமச்சந்திரன்,
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முத்துக்குமார், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாவட்ட தலைவர் மிலிட்டரி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மண்டல் பொதுச் செயலாளர் மணி வரவேற்றார். முடிவில் பொதுச் செயலாளர் சந்திரசேகர்
நன்றி கூறினார்.