திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் பாலுார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். இவர் முசிறி சப்-ரிஜிஸ்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் மாமியார் வெங்கடலட்சுமியின் வீடு உள்ளது. இந்நிலையில் மாமியார் தனது மகனுடன் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். இதையடுத்து பூட்டப்பட்ட வீட்டை பார்க்க பாலசுப்பிரமணியன் சென்ற போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகையை திருடியுள்ள கொள்ளையர்கள், பைக் சாவியை எடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்றுள்ளது தொிய வந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிந்துள்ள கொள்ளிடம் போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி தில்லைநகர் குப்பங்குளம் பகுதியில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்றுக் கொண்டிருப்பதாக தில்லைநகர் போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குப்பாங்குளம் பகுதிக்கு சென்று பார்த்த பொழுது அங்கு இரண்டு பேர் மதுபானம் விற்றுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து இரண்டு பேரையும் பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது திருச்சிமாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள சேதுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 44) என்பதும், தப்பி ஓடியவர் குப்பாங்குளம் பகுதியை சேர்ந்த பாலன் (வயது 50) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து உள்ளனர். தப்பியோட பாலனை போலீசார் தேடி வருகின்றனர்.