Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திமுக அரசு கண்டித்து திருச்சியில் நாளை பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்

0

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கன்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்குகிறார் போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும் தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மேற்கண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜசேகரன் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்