நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்கள் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளார் இது தற்போது திமுக தலைமையகத்திற்கு புகாராக சென்றுள்ளது ஒரு திமுக எம்எல்ஏ திமுக மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்றால் அதில் பல உள்நோக்கம் இருக்கிறது என்றும் கட்சி நிர்வாகத்தினர் தலைமையகத்துக்கு புகார் அளித்துள்ளனர் போராட்டத்தின் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.
கடந்த சில மாதங்களாக திருச்சியில் உள்ள பல சாலைகள் முழுவதும் குண்டும், குழியும், புகைமண்டலமாக மாறிவிட்டது. டூவிலர்களில் செல்பவர்களில் விழுந்து கை, கால் முறிந்து பலரும், மருத்துமனையில அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கொரோனோ காலத்தை காட்டிலும், மண் தூசி பறப்பதால் சுவசிப்பதற்கே திருச்சி மக்கள் மற்றும் வியாபாரிகள் என அவைரும், பெறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள், கடைகாரர்கள் எல்லோரும், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பல தரப்பிலும் தொடர்ச்சியாக புகார் அளித்துக்கொண்டே இருந்தனர். ஆனாலும் மாநகராட்சி அதிகாரிகள் இதோ பண்றோம், அதோ செய்து முடிக்கிறோம் என ஆமை வேகத்தில் செய்து கொண்டே இருந்தனர்.
இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ
இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ
ஒரு கட்டத்தில் முதல்வரே திருச்சி செல்வேந்திரன் வீட்டிற்கு செல்லும் போது, அமைச்சர் நேருவை பார்த்து, என்னங்க ஊர் முழுக்க இப்படி குண்டும் குழியுமா இருக்குது மக்கள் ரொம்ப கஷ்டப்பட போறாங்க சீக்கிரம் வேலையை செய்து முடிங்க என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகும் அதே ஆமை வேகத்தில் நடந்நது கொண்டே இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறி போராட்டம் நடைபெற்றது