திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வில்வ நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சூர்யா(30). திருச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இருக்கும் இவர், தற்போது திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்துவிட்டார். சூர்யாவின் உறவினரும், ரயில்வே ஊழியருமான லால்குடி திருமணமேடு வளவனூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின்(40) என்பவருடன் பெண் போலீஸ் சூர்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஸ்டாலின் அடிக்கடி வில்வநகரில் உள்ள சூர்யா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். ஸ்டாலினுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் ஸ்டாலினுக்கும் சூர்யாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் உல்லாசமாக இருந்தபோது, சூர்யாவை ஆபாசமாக செல்போனில் ஸ்டாலின் படம் பிடித்துள்ளார். சில நாட்கள் கழித்து ஸ்டாலினுக்கு பண தேவை ஏற்பட்டு உள்ளது. சூர்யாவிடம் கேட்கவே அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், ஆர்யாவின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்து போன சூர்யா வேண்டாம் என கெஞ்சி உள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து மிரட்டவே பயந்துபோன சூர்யா, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சூர்யா பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெண் போலீசை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ரயில்வே ஊழியர் ஸ்டாலினை கைது செய்தார்.