திருச்சியில் பரபரப்பு கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது50).இவரது மகன் சரத்குமார் (வயது24) இவர் திருச்சியில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து திருச்சியில் உள்ள உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சரத்குமார் தங்கியிருந்த கீழ் வீட்டில் (14வயது) ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்துள்ளார்.
இதையடுத்து சரத்குமாருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் சரத்குமார் ஆசை வார்த்தைகளைக் கூறி பள்ளி மாணவியை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்த விவகாரம் மாணவிக்கு தெரியவரவே இனி உன்னோடு பழக மாட்டேன் என்று மாணவி சரத்குமாரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் மாணவியை பலாத்காரம் செய்த வீடியோவை காண்பித்து மிரட்டி சிலமுறை மாணவியை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து மிரட்டல் விட்ட படி இருந்த வாலிபரால் மாணவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் இது குறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரின் தாயார் உடனடியாக இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனோநல தத்துவ டாக்டர்களிடம் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.