சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயகுமார், செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்மூலம் நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் சற்று முன்பு வெளியே வந்தார். சொத்து அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு. தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுத்ததால் கைது செய்யப்பட்டேன்.
ஹிட்லரின் மரு உருவம் போல் முதலமைச்சர் செயல்படுகிறார், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.