நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் மேயர், சேர்மன் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தப் பதவிகளை பகிர்ந்து கொள்ள திமுக கூட்டணி கட்சிகள் உடன்பாடு செய்துகொண்டன. இந்நிலையில் இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் நின்று வெற்றி பெற்றனர். இதனால், காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் கடும் அதிருபதி அடைந்தன. இதுதொடர்பாக திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்._பதவி வெறியில் சிலர் ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான அரசியலின் வெளிப்பாடு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம் . கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என்று நம்புகிறோம்” என்று விமர்சனம் செய்திருந்தார் கே.பாலகிருஷ்ணன். இதேபோல விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தன்னுடைய பதிவில், “கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உத்தரவை மீறி நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள்
விடுத்திருந்தார்.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக கட்சிகளின் கருத்துகளை முன் வைத்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கோட்பாடுகளை மீறுவது நல்லதல்ல என்று கே.பாலகிருஷ்ணன் சொல்லி இருப்பதற்கு, ”10 கோடிக்கு கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்து விட்ட பிறகு கோட்பாடாவது, கட்டுப்பாடாவது!” என்று விமர்சித்துள்ளார் நாராயணன் திருப்பதி. இதேபோல திமுக உறுப்பினர்கள் ‘ராஜினாமா’ செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியதற்கு, ”திமுக உறுப்பினர் ரவிக்குமாரை சொல்கிறீர்களா?”என்று விமர்சனம் செய்துள்ளார் நாராயணன் திருப்பதி.2019 தேர்தலில் திமுகவிடமிருந்து இடதுசாரிகள் கட்சி ரூ.10 கோடியை பெற்றன. இதேபோல விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தான் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.