21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது…
242 பேரூராட்சி வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகள் உள்ளிட்ட மேலும் ஏராளமான வார்டுகளையும் கைப்பற்றி, 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.. குறிப்பாக. சென்னை மாநகராட்சியில், 134வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாஜக தரப்பு மகிழ்ச்சியுடன் உள்ளது.. தலைவர்களுக்கும் ஒருவித
நிம்மதியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது
பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு போனை போட்டு பேசியுள்ளார்..தனித்தே போட்டியிடுங்கள் என்று அண்ணாமலையிடம் சொன்னதே பிரதமர் மோடிதானாம்.. அதனால்தான், தனித்து போட்டி என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவிக்க நேர்ந்தது என்கிறார்கள்..
மேலிடம் நினைத்தது போலவே, அதிக ஓட்டுக்களையும் பெற்று, பாஜக முன்னேறி உள்ளது ஒட்டுமொத்த தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, ரிசல்ட் வெளிவந்த தினத்தன்று, அண்ணாமலைக்கு மறுபடியும் போனை போட்ட மேலிடம், ரிசல்ட் விவரங்களை கேட்டறிந்தாராம் பிரதமர்.. பாஜக மட்டுமல்ல, திமுக உட்பட மற்ற கட்சிகளின் விவரங்களையும் கேட்டறிந்துள்ளார்.
அப்போது, “கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் கிடைத்த வெற்றி எதிர்பார்த்தது என்றாலும், சென்னை மாநகராட்சியில், ஒரே ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது.. எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்… அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்.. அடுத்த தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டாம்.. இப்போதுள்ள நிலைமையே தொடருங்கள்.. ஆனால் எம்பி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்” என்றும் அறிவுறுத்தினாராம்.திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அடுத்த இடத்தை பாஜக பிடித்துள்ளது தெம்பை தந்துள்ளதால், நகரங்களை மையப்படுத்தியே பிளானை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் எம்பி தேர்தலுக்கான களப்பணி துவங்கி உள்ளது தேசிய அரசியலில் கவனத்தை பெற்று வருகிறது…!