தேர்தல் நேரத்தில் காணொலி காட்சியில்தான் நான் பிரசாரத்தை பேசி முடித்தேன். மக்களை சந்திக்க வர தைரியம் இல்லை….
திமுக துணை அமைப்புச்செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் பேசிய போது, ‘
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வர உள்ளது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே இந்த வெற்றிக்கு இடையே இந்த திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மணமக்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன்.
இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலி காட்சியில்தான் நான் பிரசாரத்தை பேசி முடித்தேன். மக்களை சந்திக்க வர தைரியம் இல்லை என்று சிலர் என்னைப் பார்த்து சொன்னார்கள். எதற்காக நான் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தேன் என்றால், கொரோனா காலமாக இருக்கிற காரணத்தால் அந்த தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. எனவே நான் நேரடியாக பிரசாரத்துக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் சொன்னேன்.
தேர்தல் முடிந்து அதன் வெற்றிவிழா நடக்கும்போது நிச்சயமாக, உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன். ஏன் நேரில் வரவில்லை? என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். ஆனால் மழை காலத்திலே நான் வெள்ளத்தை பார்க்க போனபோது ஏம்பா இப்போ வர்ற? உடம்பை கெடுத்துக் கொள்கிறாய் என்ற எண்ணத்தில்தான் மக்கள் இருந்து கொண்டிருந்தார்கள்’ என்று பேசினார்